ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலையில் பள்ளிக்கல்வித்துறை இருப்பதால், நாளை போரட்டம் நடக்கும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையின் பேரில் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கூட்டமைப்புடன் டிபிஐ வளாகத்தில் நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடந்தது.
அதில் மேற்கண்ட கூட்டமைப்பில் உள்ள 22 சங்கங்கள் பங்கேற்றன. இதையடுத்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புடன் நேற்று பேச்சு நடந்தது. கூட்டத்துக்கு பிறகு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியதாவது:
எங்களின் பிரதான கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஏற்க இயலாத நிலையில் இருப்பதால் நாங்கள் திட்டமிட்டபடி நாளை(28ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments