தமிழ்நாட்டில் அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என உணவுத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம் நடைபெறும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 30) செயல்படும் உணவுத்துறை ஆணையர் அறிவித்துள்ளர். இதனை ஈடு செய்யும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments