Ad Code

Responsive Advertisement

நட்சத்திர குறியீடு ரூபாய் நோட்டு செல்லுமா?: ரிசர்வ் வங்கி விளக்கம்

 



 வரிசை எண்ணுக்கு முன்பாக நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. சில ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணுக்கு முன்பாக நட்சத்திர குறியீடு அச்சிடப்படுகிறது. அத்தகைய நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்கதா என்பது குறித்து பொதுமக்களிடம் அடிக்கடி சந்தேகம் எழுகிறது. 


சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வாங்க தயங்குகின்றனர். இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் வழக்கமான நோட்டுகளை போல செல்லத்தக்கது. 


பிழை கொண்டு அச்சிடப்பட்ட நோட்டுக்கு பதிலாக அச்சிடப்படும் நோட்டு அல்லது சேதமடைந்ததால் மறுமுறை அச்சிடப்பட்ட நோட்டு என்பதை இந்த நட்சத்திரக் குறியீடு அடையாளப்படுகிறது’ என கூறி உள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement