Ad Code

Responsive Advertisement

வயதானவர்கள் பயணம் செய்யும் போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்

 




நீங்களும் உங்கள் வயதான பெற்றோருடன் சுற்றுலா செல்ல நினைத்தால், பயணத்திற்கு முன் விஷயங்களை கண்காணிக்க வேண்டும். இதில் சேருமிடம் முதல் ஹோட்டல் முன்பதிவு, விமான டிக்கெட்டுகள் என அனைத்தும் அடங்கும். தற்போது இந்த பதிவில் வயதானவர்கள் பயணம் செய்யும் போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி  பார்ப்போம்.


ஆரோக்கிய பரிசோதனை 

இன்று 40 வயதாகி தாண்டி விட்டாலே பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். உங்களின் வயதான உறவுகள் தனியாக பயணம் செய்தாலும் அல்லது உங்களுடன் பயணம் செய்தாலும், பயணத்திற்கு செல்லும் முன் அவரது உடல்நிலை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.


உடல் பரிசோதனை செய்வதன் மூலம் அவருக்கு பிபி, சுகர் அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது தெரியவரும். இந்த நிலையில் பயணம் செய்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை முடிவு செய்வதை இந்த பரிசோதனை எளிதாக்கும்.


மருந்துகளை எடுத்துச்செல்ல மறவாதீர்கள் 

பதுவாகவே வயதானவர்கள் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு மருந்து எடுத்துக் கொள்வதுண்டு. அப்படி ஏதேனும் மருந்து மாத்திரைகள் சாப்பைட்டால் அதனை மறவாமல் எடுத்து செல்ல வேண்டும். அப்படி எந்த பிரச்னையும் இல்லாதவர்கள்கள் முன்னெச்சரிக்கையாக காய்ச்சல், தலைவலி, வலி நிவாரணி போன்றவற்றிற்கு மருந்துகளை கொண்டு செல்ல வேண்டும்.


ஆரோக்கியமான உணவு 

வயதானவர்கள் பயணம் செய்யும் போது, ஆரோக்கியமான உணவுகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். வயது அதிகரிக்கும் போது, செரிமான அமைப்பு பலவீனமடைகிறது. உணவு சரியாக ஜீரணமாகாது. அசிடிட்டி, கேஸ் பிரச்சனையும் மிகவும் தொந்தரவாக இருக்கும், எனவே பயணத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.



டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பயணம் செய்யுங்கள்.

வயதானவர்களுடன் பயணம் செய்யும் போது இதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பல சமயங்களில் ரயில் பயணத்தின் போது சீட் கிடைக்காமல் போனாலும் என்ன நடக்குமோ என்று பயணம் செல்கிறார்கள். ஆனால் பயணத்தின் போது பெரியவர்களிடம் இந்த எண்ணத்தை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்களுக்கு இருக்கை கிடைக்காவிட்டால், நீண்ட பயணத்தில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement