Ad Code

Responsive Advertisement

கருப்பு கவுணி கொலஸ்ட்ராலை கட்டுபடுத்துமா?

 




கருப்பு கவுனி என்பது ஒரு அரிசி வகையை சேர்ந்ததாகும். இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் இருப்பதால் அந்த நிறத்திற்கு ஏற்றவாறு கருப்பு கவுனி என்று அழைக்கப்படுகிறது.


இதில் நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகிறது. இந்த அரிசியில்  இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்ளது. இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள்  உள்ளது. தற்போது இந்த பதிவில் கருப்பு கவுனியால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


கொலஸ்ட்ரால் 

கொலஸ்ட்ரால் பிரச்னை அதிகமாக உள்ளவர்கள், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதுண்டு. அப்படிப்பட்டவர்கள், தங்களது உணவில் கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக்  கொண்டால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது.


சர்க்கரை நோய் 

இன்று பெரும்பாலானோருக்கு நீரிழிவு பிரச்சனை உள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்கள், கருப்பு கவுனி அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நீரிழிவு பிரச்சனையில் மெல்ல மெல்ல விடுபடலாம்.


இதய பிரச்சனை 

கவுனி அரிசியில் அதிகப்படியான புரதசத்து மற்றும் நார்சத்து உள்ளது. இது இதயம் சம்பந்தமான பிரச்சனையை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு கவுனியில் சாப்பாடு செய்து சாப்பிட்டால் இதயம் பலமடையும்.


ஆஸ்துமா 

கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இதில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி உற்பத்தி ஆகாமல் தடுத்து, அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


புற்றுநோய்

இந்த அரிசியில் சாப்பாடு செய்து சாப்பிட்டால், நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இந்த அரிசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. செல் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் இது பாதுகாக்கிறது.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement