எழுத்துத்துறை, கணிணி துறை மற்றும் இசைத்துறை ஆகிய மூன்றில் உள்ளவர்க ளுக்கு
அவர்களின் விரல்கள் மற்றும் மூட்டுகள் ஏற்படும் வலியினை போக்க அல்லது கட்டுப்படுத்த சிலஅவசியபயிற்சிகளை மேற்கொள்ள தவிர்க்க கூடாது. பொதுவாக கை, விரல், கை மூட்டு, தோள்பட்டை ஆகிய இட ங்களில் பிடிப்பு, வலி ஏற்படுவதை தசை நார் பிரச்சினை என்கிறோம். இதனால் கைகளை மடக்கவும், நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும். இந்த மாதிரியான தசைநார் பிரச்சினை ஏற்படும்போது, பெரு விரலில் அதிகளவில் வலி ஏற்படும். அதை வைத்தே இது தசைநார் பிரச்சினை என அறிந்து கொள்ள முடியும். கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பதால் தான் இது போன்ற தசை நார் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரண ம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழு துவார்கள். ஒரு சிலர் சாய்த்து பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளி யே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்சினைகள் ஏற்படும். பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30 முதல் 50 வய துள்ள வர்களுக்கு இந்த பிரச்சினை வரும். சில மாணவர்களுக்கு அதிகளவில் எழுது வதால் கூட வரலாம்.
தட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு செய்பவர்கள் விர ல்களுக்கு அதிகளவில் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு ம் இது போன்ற பிரச்சினைகள் வரும். சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கு ம். அப்போது விரல்களுக்கு அதிகளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்ப டுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இப் பிரச்சினை வர லாம். மேலும், வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசை க்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களு க்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.
எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும்துறைகளில் வேலைபார்ப்போர் கைக ள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசிய பயிற்சி களை மேற்கொள்ளவேண்டும். எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்து க்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும், தொட ர்ந்து செய்யாமல் சற்று இடைவெளி விட்டுச் செய்வது நல்லது.
கைகள், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்க லாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையி ல்உள்ள வழவழப்புத்தன்மை பாதிக்கும். கடினமான தட்டச்சு களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நிமிர்ந்த நிலையில் சவுகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும். கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெய் தடவி, மென்மையாக மசாஜ் கொடுக்கலாம். தொடர்ந்து வலி, வேலை செய்ய முடியாத நிலை இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோச னை பெறுவது நல்லது.
விரல்களுக்கு என சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால், குழ ந்தைகள் விளையாடும் களிமண் ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான். வளைந்துகொடு க்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்க ளுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கு ரப்பர் பேண்ட் பயன்படு த்து வதைத் தவிர்க்கலாம்.
ஏனெனில், பயிற்சி செய்யும்போது ரப்பர் பேண்ட் அறுந்து, கண்ணி லோ கைகளிலோ வேகமாகப் பட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
கை விரல்களை 5 – 10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும். வெந்தயம், மிளகு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.
கட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பது போல, இப்பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒது க்கிச் செய்வது நல்லது.
0 Comments