இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம், துபாய் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இப்போது சீசனில் உள்ள மலைகளின் அரசி ஊட்டி – புலிகள் அதிகம் இருக்கும் முதுமலை – குளிர்ச்சி கொஞ்சும் குன்னூர் என்று மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லும் 5 நாள் ரயில் பயண பேக்கேஜை IRCTC நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பள்ளி விடுமுறைகள் மேலும் சில நாள் தள்ளி போடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை முடியும் முன்னர் சென்று வர ஏற்ற பயணமாக இருக்கும். தனியாக பயணிக்கும் ஆகும் செலவை விட குறைந்த விலையில் இந்த பேக்கேஜ் இருக்கும். இந்த பயண விபரங்களை விரிவாக சொல்கிறோம்.
பயண விபரங்கள்:
நாள் 01:- பயணத்தின் முதல் நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் எண்: 12671, நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் 21.05 மணிக்கு பயணம் தொடங்கும்.
நாள் 02 :- காலை 06.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றதும் சாலை வழியாக ஊட்டியில் உள்ள ஹோட்டளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்படுவர். அங்கிருந்து, தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம், ஊட்டி ஏரி மற்றும் தாவரவியல் பூங்காவைப் பார்வையிடலாம்.
நாள் 03:– காலை படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி போன்றவற்றைப் பார்வையிட அழைத்து செல்லப்படுவர். பின்னர் முதுமலை வனவிலங்கு சரணாலயம், யானைகள் முகாம், ஜங்கிள் சவாரி ஆகியவற்றைப் பார்வையிடலாம்.
நாள் 04:- காலை அவர்கள் சொந்தமாக ஊட்டியை சுற்றிப் பார்க்கஅனுமதிக்கப்படுவர். அதோடு சிம்ஸ் பூங்கா, லாம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின்ஸ் நோஸ் ஆகியவற்றைப் பார்வையிட குன்னூருக்கு அளித்துச்செல்லப்படுவர். பின்னர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் வந்து 21.20 மணிக்கு ரயில் எண். 12672 – நீலகிரி விரைவு வண்டியில் மூலம் மீண்டும் சென்னைக்கு கிளம்பலாம்.
நாள் 05:- சென்னை சென்ட்ரல் 06.20 மணிக்கு வந்தடையும். அதோடு ஊட்டி- முதுமலை- குன்னூர் பயணம் நிறைவுபெறும்.
இது குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்க ஏற்ற பயண திட்டமாக இருக்கும்.
பேக்கேஜின் விலை:
5 இரவுகள் 4 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 7900 முதல் தொடங்குகிறது, மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹20750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹4550 மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹3700 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க: கடலுக்கு மேலேயும், அடியிலிருந்தும் கடலை ரசிக்க ஏற்ற ஜப்பானின் அட்டகாச டவர்
அதோடு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
இந்த பயணம் ஒவ்வொரு வியாழன் அன்றும் சென்னையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR007 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை தானே. உலகின் அழகை ரசித்துவிட்டு போவோமே.
0 Comments