இதுகுறித்து டாக்டர். நவீன் பாம்ரீ கூறுகையில், “உங்கள் கால் தசைகள் உறுதியாக, பலமிக்கதாக இருந்தால் , அது உங்களின் இதய நலன் நல்ல நிலைமையில் இருப்பதைக் குறிக்கிறது. சீரான உடற்பயிற்சி, குறிப்பாக கால்களுக்கான பயிற்சியை செய்யும்போது உங்கள் இதயமும் ரத்த தமனிகளும் அதிக திறனோடு இருக்கின்றன.
இதன் காரணமாக உடலுக்கு ரத்தத்தை கொண்டுச் செல்லும் இதயத்தின் திறன் அதிகரிக்கிறது. இதனால் இதயத்தின் அழுத்தம் குறைவதோடு மாரடைப்பு வரும் ஆபத்தும் குறைகிறது. மேலும் ஒருவருக்கு பலமான கால் தசைகள் இருக்கும்பட்சத்தில் அவரால் தினசரி வேலைகளை எளிதாக முடிக்க முடிகிறது.
ஆனால் மாரடைப்பு வந்த சிலர், அதன்பிறகு உடல் இயக்கத்தை குறைத்துக் கொண்டு எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்து விடுகின்றனர். இது அவர்களுக்குதான் ஆபத்தில் முடியும்” என்கிறார்.
0 Comments