டிச.9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும். 9ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 9ம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 07-ம் தேதி மாலை புயலாக வலுவடையக்கூடும்.
0 Comments