ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன,என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2023க்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புதுறை தெரிவித்துள்ளது, தமிழ்நாடடின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது மக்களால் மிகவும் விரும்பி ரசிக்ககூடிய விளையாட்டாகவும் இருக்கின்றது. அந்த வகையில் அரசு நல்லபடியாக நடத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமயபுரத்திலும்,மறுநாள் பாலமேட்டிலும், அதனை தொடர்ந்து அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைக்கப்படுவது வழக்கம்.
இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகவும்,பேசப்பட்டு வருகிறது. இதை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் வரக்கூடியது நம்மால் பார்க்க முடிகிறது. இந்தநிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கானது தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்க பட்டு இருக்கிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிகள் 2017 ஆண்டு தெரிவித்த அதே சட்டத்தின் படி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கட்டாயம் நடத்தப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று கால்நடை பராமரிப்புதுறை தெரிவித்துள்ளது,
ஜல்லிக்கட்டுக்கான வழக்கு உச்சநீதிமன்றதில் நடைபெற்று வருகிறது தேதிகள் பிறப்பிக்கப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 2023ஆம் ஆண்டு நடை பெறுமா என்று எதிர்பார்த்தநிலையில் தமிழக அரசு தரப்பில் இருந்து கால்நடை பராமரிப்புதுறை தகவலின் அடிப்படையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டு இருக்கிறோம் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
0 Comments