பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.19) ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு எவ்வாறு இருக்க வேண்டும், அதை எவ்வாறு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை, கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்குவது தொடர்பாகவும் இதில் விவாதித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
0 Comments