Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் வரும் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

 




தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் டிச., 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(டிச.,17), நாளையும்(டிச.,18) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வரும்(டிச.,19): தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரை க்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வரும்(டிச.,20): தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரை க்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் டிச., 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.


அதிகப்பட்ச வெப்பநிலை 30-31டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று(டிச., 17) சூறாவளிக்காற்று மணிக்கு 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement