Ad Code

Responsive Advertisement

'டாப் - 10' படைப்புகள்: பட்டியல் வெளியிட்டது 'YouTube' நிறுவனம்

 




'யு டியூப்' நிறுவனம், 2022ம் ஆண்டின், 'டாப் - 10' படைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், விஜய் பட பாடலை தவிர, மற்ற எந்த தமிழ் படைப்போ, படைப்பாளிகளோ இடம் பெறவில்லை.


திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் கனவை சுமக்கும் படைப்பாளிகளின் வாடிவாசலாக, யு டியூப் தளம் விளங்கி வருகிறது. இந்த தளம், 2022ம் ஆண்டின் சிறந்த, 10 படைப்புகளை வெளியிட்டுள்ளது.


இதில், சிறந்த டிரெண்டிங் வீடியோக்கள், இசை, குறும்படங்கள், கிரியேட்டர்கள், பெண் படைப்பாளிகள் மற்றும் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


இப்பட்டியலில், விஜயின், பீஸ்ட் படப் பாடலை தவிர, தமிழகத்தை சேர்ந்த எந்த படைப்பும், படைப்பாளிகளும் இடம் பெறவில்லை.


சிறந்த வீடியோக்களில், 'ஏஜ் ஆப் வாட்டர்' முதலிடத்தை பெற்றுள்ளது. இப்பட்டியலில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற, அரபிக்குத்து பாடலின் முதல் விளம்பரம், நான்காம் இடத்தில் உள்ளது.


சிறந்த இசை வீடியோக்களில், புஷ்பா படத்தில் இடம் பெற்ற, 'ஸ்ரீவள்ளி...' பாடல் முதலிடம்; 'சாமி...' பாடல் மூன்றாம் இடம், 'ஊ ஆண்டவா...' பாடல் ஏழாம் இடத்தை பெற்றுள்ளது. அரபிக் குத்து பாடல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.


சிறந்த 20 படைப்பாளிகளில், 'ஷார்ட்ஸ் பிரேக்' முதலிடத்தை பெற்றுள்ளது. பெண் படைப்பாளிகளில் ஜான்வி பட்டேல் முதலிடத்தை பிடித்துள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement