மோசடி கும்பல் ஒரு லிங்கை உருவாக்கி செல்போன் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்புகிறார்கள். உங்கள் சிம்கார்டை 4ஜியில் இருந்து 5ஜியாக மாற்ற வேண்டுமானால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செல்போன் சேவை நிறுவனங்கள் தற்போது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளன. அதன்படி இந்தியாவில் சிம்கார்டுகளை 4ஜியில் இருந்து 5ஜியாக மாற்றும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதை வைத்து ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
அவர்கள் ஒரு லிங்கை உருவாக்கி செல்போன் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்புகிறார்கள். உங்கள் சிம்கார்டை 4ஜியில் இருந்து 5ஜியாக மாற்ற வேண்டுமானால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதை நம்பி அந்த லிங்கை கிளிக் செய்யும் போது அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் மோசடி செய்யப்படுகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற குறுந்தகவல்கள் வரும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments