உங்களுக்கு நிறைய கால்நடைகள் இருக்குமே என்ற பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் பேரவைத் தலைவா் அப்பாவு எழுப்பிய கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், தமிழகத்தில் 7 கோடி கால்நடைகள் இருக்கின்றன. அவற்றில் 8 லட்சம் கால்நடைகள் நெல்லை மாவட்டத்தில் மட்டும் உள்ளன என்றாா்.
அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அதில் நிறைய உங்களுக்கு இருக்குமே என்றாா். அவரது இந்தப் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
0 Comments