நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நடைபாதை அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், சாலை சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தன.இந்நிலையில், மேலூர் ஊராட்சி உள்பட ஒரு சில இடங்களில் வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், வளர்ச்சி பணிகளை சரியாக கண்காணிக்கவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில், பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சந்திரசேகர், பொறியாளர் ராஜ்குமார் ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments