Ad Code

Responsive Advertisement

‘மணப்பெண் தேவை’ போர்டுடன் பஸ் நிலையம் வந்த பட்டதாரிகள்: வரதட்சணைக்கு எதிராக பிரசாரம்

 



வரதட்சணை வேண்டாம், சாதி மதம் தேவையில்லை என்று கூறி மணப்பெண்  தேவை என்ற போர்டு மாட்டி பட்டு வேட்டி சட்டையுடன் வடசேரி பஸ் நிலையம் வந்த  பட்டதாரிகள் பொதுமக்களை கவர்ந்தனர்.  குமரி மாவட்டம் வில்லுக்குறியைச் சேர்ந்தவர் ஜெனிஷ் மோன். எம்எஸ்சி படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுனிஷ். இவர் பி.இ படித்துவிட்டு  எம்.பி.ஏ படித்து வருகிறார். இவர்கள் இருவரும் வரதட்சணை கொடுமை தொடர்பாக  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் வடசேரி பஸ்  ஸ்டாண்டில் நேற்று காலையில் கழுத்தில் போர்டு ஒன்றை மாற்றிக்கொண்டு  வந்தனர்.


பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்த இவர்கள் மணப்பெண் தேவை என்ற  போர்டில் வரதட்சணையாக கார், 101 பவுன் நகை, பணம் தேவையில்லை, ஜாதி, மதம்  தேவையில்லை என்று கூறி அவர்களின் இன்ஸ்டாகிராம் முகவரியை  குறிப்பிட்டிருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடசேரி பஸ்  நிலையத்தில் வாலிபர்கள் இருவர் மணக்கோலத்தில் பட்டு வேட்டி சட்டையுடன்  கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  போர்டை பார்த்து பொதுமக்கள் சிலர் பாராட்டி சென்றனர். மேலும் அங்கு  நின்றிருந்த இளைஞர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என கூறியும்  பணத்தைவிட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என்றும்   தெரிவித்தனர்.


இது தொடர்பாக ஜெனிஸ் மோன் மற்றும் சுனிஸ் ஆகியோர் கூறுகையில், சாதாரணமாக  வரதட்சணை வாங்கக்கூடாது, வரதட்சணை ஒழிக என்று நாம் முழக்கங்கள் எழுப்பி  பிரசாரம் செய்தால் பொதுமக்கள் கேலி செய்வதுண்டு. மணமகன் கோலத்தில் மக்களின்  கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரசாரம்  மேற்கொண்டோம். இந்த முயற்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான  தூண்டுகோலாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement