காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட மாவட்ட மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பள்ளி கல்வித்துறையில் அடிப்படை பணியாளர் முதல் நேர்முக உதவியாளர் வரை பணிபுரிபவர்களுக்கு காலிப்பணியிடங்கள் இருந்தும் கடந்த 2 ஆண்டுகளாக பணிமாறுதல் வழங்காமல் மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு உடனடியாக பணிமாறுதல் வழங்க வேண்டும்.
பதவி உயர்வு வழங்கிட கோரியும், நிலுவையிலுள்ள அமைச்சு பணியாளர்களுக்கு தகுதிக்கான பருவம் முடித்தலும், 2 சதவீதம் ஆசிரியர் பதவி உயர்வுகளும் வழங்கிட வேண்டும். குளறுபடியான அரசாணைகளான 101, 108ஐ ரத்து செய்திட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.
0 Comments