Ad Code

Responsive Advertisement

ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள சீன போன்களுக்கு வருகிறது தடை: கலக்கத்தில் ஸியோமி, ரியல்மி நிறுவனங்கள்

 




ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விலையுள்ள சீன போன் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் மொபைல் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


சீன மொபைல் போன்கள் குறிப்பாக ஸியோமி கார்ப் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சியுள்ளது. உலக மொபைல் சந்தையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. இந்தியச் சந்தை தான் ஸியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்களுக்கு இந்தத் தடை அமலுக்கு வந்தால் அது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.


ஏற்கெனவே, ஸியோமி, ஆப்போ, விவோ போன்ற செல்போன் விற்பனை நிறுவனங்களின் நிதி மேலாண்மையை கண்காணிப்பு வளையத்திற்குள் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ZTE கார்ப், ஹுவேய் டெக்னாலஜிஸ் கோ மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடுபிடி விதித்தது.


இப்போது, ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விலையுள்ள சீன போன் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஸியோமி, ரியல்மீ, ட்ரான்ஸன் போன்ற நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.


2020 ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா மோதலுக்குப் பின்னர் இந்தியா சீன செயலிகளை தடை செய்தது. வீசேட், பைட்டான்ஸ், டிக்டாக் போன்ற பிரபல செயலிகள் பல தடை செய்யப்பட்டன.


நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் விதியின் கீழ், மத்திய அரசு இதுவரை 320 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.


உள்ளூர் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான லாவா, மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனங்கள் செயல்பாட்டை ஊக்குவிக்கவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளாது.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement