மாணவி சிந்துவின் மேல் சிகிச்சைக்கு நிதி வேண்டி தந்தை கோரிக்கை விடுத்த செய்தி இந்து தமிழ் இணையதளத்தில் நேற்றுமுன் தினம் (புதன்கிழமை) வெளியான நிலையில்மாணவி சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி சிந்து. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோழி வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறுதலாக விழ, அவருடைய இரண்டு கால் மூட்டுகளும் கடுமையாக சேதமடைந்தன. முகத்தின் தாடையின் ஒரு பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. முன்வரிசையில் இருந்த பற்கள் முழுமையாகக் கொட்டிவிட்டன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிந்துவுக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுவிட்டன. இதன் விளைவாக சிந்து தற்போது எழுந்து நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார். எனினும் சிந்துவால் நடக்க முடியாத சூழல் நிழவுகிறது. அவரால் நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமரவும் முடியாது.
இந்த நிலையில்தான் சிந்து தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நேற்று எதிர்கொண்டார். இதுகுறித்து, சிந்துவின் தந்தை சக்தியிடம் பேசியபோது, சிந்துவிற்கு சிகிச்சை அளிக்க போதிய நிதி இல்லை எம்றார். டீ விற்பனை செய்யும் தன்னால் பெருந்தொகையை ஏற்பாடு செய்ய முடியாது என்பதால் தனது மகளின் மேல் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும். எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
0 Comments