சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: தென்னிந்தியப் பகுதிகளில் மே மாதத்துக்கு சராசரியாக பார்க்கும் போதுஅதிகபட்ச வெப்ப நிலை என்பது அந்தந்த பகுதியில் இருக்கும் அதிக பட்ச வெப்ப நிலையை விட சற்று குறைவாக இருக்கும் வாய்ப்புள்ளது. இது ஒரு மாதத்துக்கான சராசரி வெப்ப அளவு. ஆனால் ஒவ்வொரு நாட்டில் பார்க்கும் போது ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை வெப்ப நிலை மாறுபடும். 14 நாட்களுக்கு ஒரு முறையும் மாற்றம் ஏற்படும்.
தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை புயலாக மாறி ஆந்திரா-ஒடிசா கடலோரப்பகுதிக்கு நெருங்கி வரும். அந்த புயலின் நகர்வின் காரணமாக அதை நோக்கி காற்று மேற்கு திசையில் இருந்து செல்லும் போது தரைப்பகுதியில் வெப்ப நிலை அதிகரிக்கும்.
மேலும் காற்றின் ஈரப்பதமும் உறிஞ்சப்படும். அதனாலும் வெப்பம் அதிகமாக இருக்கும். புயல் இருக்கும் வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும். அடுத்து புயலின் நகர்வைப் பொருத்து வெப்பம் குறையும். கோடை மழை என்பது குறைந்த காற்றழுத்தம் உருவாகும் போது பரவலாக இருக்கும். மேலும் அந்தந்த பகுதியில் நிலவும் வெப்பத்தை பொருத்து கோடை மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் உருவாகும். அதன்படி அடுத்த 5 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும்.
0 Comments