Ad Code

Responsive Advertisement

இன்று தேர்வு தொடங்க உள்ள நிலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

 


இன்று தேர்வு தொடங்க உள்ள நிலையில் பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சென்னையை அடுத்த புழல் லிங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தையல் தொழிலாளி. இவருடைய மகள் பிருந்தா(வயது 17). இவர், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.


இன்று(வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. பிருந்தா, கடந்த 3 மாதங்களாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்துவந்தார்.



இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு அவர், இன்னும் ஒரு வாரத்தில் கட்டணத்தை செலுத்தி விடலாம் என கூறியதாக தெரிகிறது.


தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையே என்ற விரக்தியில் இருந்து வந்த பிருந்தா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement