Ad Code

Responsive Advertisement

பள்ளி மேலாண்மை குழுவில் 5.74 லட்சம் பெற்றோர் இணைகின்றனர்: பள்ளிக் கல்வித்துறை தகவல்

 




தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் 5 லட்சத்து 74 ஆயிரம் பெற்றோர் சேர்க்கப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைப்பு செய்யப்பட்டு மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய தலா 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக 37,557 பள்ளிகளிலும் புதியதாக மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இந்த பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறு கட்டமைப்பு செய்வதற்கான தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி பெண்கள் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கல்வியாண்டில் பள்ளிக் கல்விக்காக இந்தநிதி நிலை அறிக்கையில் ரூ.36 ஆயிரம் கோடி பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும். தரமான, சமமான கல்வி  குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் தான் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக்குழு மறுகட்டமைப்பு  செய்யப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது இதன் நோக்கமாக உள்ளது. அத்துடன் நம் பள்ளி, நம் பெருமை என்ற திட்டத்தின் கீழ் மேலாண்மைக் குழுக்கள் இணைக்கப்பட்டு  மறு கட்டமைப்பு செய்வதற்கான அனைத்து பணிகளும் தொடங்கியுள்ளன. இதன்படி அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியரின் பெற்றோரை இந்த மேலாண்மைக் குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 849 நடுநிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியரின் பெற்றோர் சுமார் 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்த குழுக்களில் சேர்க்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.


இதன் மூலம் பள்ளிக் கல்வியில் தரமான சமூக பங்கையும் பள்ளிகளில் இணைக்க உள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக் குழுக்களில் தலா 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களில் 15 பேர் மாணவ மாணவியரின் பெற்றோராக இருப்பர். மொத்த குழு உறுப்பினர்களை பொறுத்தவரையில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவில் ஒரு ஆசிரியர் பிரதிநிதியாக சேர்க்கப்படுவார். ஒரு தன்னார்வலரும் சேர்க்கப்படுவார்.

இதையடுத்து, இந்த மேலாண்மைக் குழுவுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆர்வமுடன் பெற்றோர் இந்த குழுவில் சேர்ந்து வருகின்றனர்.  


இந்த குழுவில் சேரும் பெற்றோர் பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டுவதுடன் அதற்கான திட்டத்தையும் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வளர்ச்சி திட்டம் என்பது அந்தந்த பள்ளிகள் இயங்கும் வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கட்டமைப்பது, கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கும் உதவியாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளபடி  விரைவில் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் மேலாண்மைக் குழுவில் சேர்க்கப்படுவார்கள்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement