பள்ளி ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியா பிரசாத். இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 22 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறார்.வழக்கம் போல், நேற்று முன்தினம் இவர் பள்ளிக்கு சென்றார்.
இவரது மகன் அர்ஜுன் வீட்டை பூட்டி, வெளியே சென்றார். பின், அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும், வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 50 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரையடுத்து, ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.
0 Comments