Ad Code

Responsive Advertisement

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த Airtel நிறுவனம்!




5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது என ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 


5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது என ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது மொபைல் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தி அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை மற்ற சாதனங்களுடன் பகிர முடியாது. அதேபோல் ஏர்டெல் 5G plus கிடைக்கும் இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. ஒரு சிலரின் லேப்டாப்  சிம் கார்டை ஆதரிக்காததால், பணிக்காக மொபைல் ஹாட்ஸ்பாட் இணைப்பைச் சார்ந்திருக்கின்றனர்.

வரம்பற்ற டேட்டாவிற்குப் பணம் செலுத்தினாலும், ஹாட்ஸ்பாட் பயன்பாட்டைத் தடுப்பது அந்தத் திட்டத்தின் பயனை குறைத்துவிடும் என நெட்டின்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

தினமும் அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் நபர்களுக்காக ஏர்டெலில் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, அதிகமாக ஸ்ட்ரீம் செய்பவர்கள், தங்கள் ஃபோனிலிருந்து வேலை செய்பவர்கள், பெரிய கோப்புகளைப் பதிவேற்றுபவர்கள், கிளவுடில் கேம் விளையாடுபவர்கள், வீடியோ அழைப்புகளில் பங்கேற்பவர்கள் எனப் பலதரப்பட்டோர் இதில் அடங்குவர். 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement