காஸ்ட்ரிக் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். இதை தீர்ப்பது எப்படி? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
பவனமுக்தாசனம்
நேராக படுத்துக் கொள்ளுங்கள். வலது முழங்காலை மடக்கி, உங்கள் மார்பை நோக்கி இழுத்து, இரு கைகளால் கட்டிக் கொள்ளவும். சில நொடிகள் ஆழ்ந்து மூச்சுவிட்டு, பின்னர் இடது காலிலும் இதைச் செய்யவும். இது குடலில் இருக்கும் வாயுவை உடனடியாக வெளியேற்ற உதவுகிறது.
பாலாசனம்
முன்னே அமர்ந்து, உங்கள் பின் பகுதியை குதிகால்களின் மீது வைக்கவும். மெதுவாக முன்னோக்கி குனிந்து, உங்கள் நெற்றியைத் தரையில் வைக்கவும். உங்கள் கைகளைத் தரையில் நேராக நீட்டவும்.
அர்த்த பவனமுக்தாசனம்
தரையில் நேரே படுத்துக்கொள்ளுங்கள்; மூச்சை இழுக்கும் போது, ஒரு காலை மட்டும் மடக்கி உங்கள் மார்பை நோக்கி அழுத்தவும். மற்றொரு காலைத் தரையில் நேராக நீட்டி வைத்திருக்கவும். இந்த ஆசனம், அடிவயிற்று உறுப்புகளைத் தூண்டி, செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.
சுப்த மத்ஸ்யேந்த்ராசனம்
நேராக படுத்து, இடது காலை நீட்டி, வலது காலை மடக்கி இடதுபுறமாகத் திருப்பவும். உடம்பை வலது புறமாகத் திருப்பி, கைகளை நீட்டி ஓய்வெடுக்கவும். குடல் இயக்கத்தைத் தூண்டி, வாயுவை எளிதாக வெளியேற்ற உதவும்
ஆனந்த பாலாசனம்
நேராக படுத்து, இரண்டு கால்களையும் மேலே தூக்கி, முட்டிகளை மடக்கி மார்பின் இரு பக்கங்களிலும் கொண்டு வரவும். இரண்டு கைகளால் பாதங்களை வெளிப்புறமாகப் பிடித்துக் கொள்ளவும். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது





0 Comments