2026 ஆம் ஆண்டின் பராபவ வருடத்தில் எந்த ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள்? புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்புகள் மாற்றத்தை தரக்கூடிய வகையில் இருக்கும் இந்த வருடம். மேலும் இந்த வருடம் அதீத லாபத்தை பெறுவீர்கள். இந்த ஆண்டு முதல் பயணங்கள் அதிகம் மேற்கொள்வீர்கள். குடும்ப தலைவிகளை பொறுத்தவரைக்கும் வருமான அதிகரிப்பு ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து பணவரவுகள் ஏற்படும். உங்களுடைய நான்காம் இடத்தில குரு உச்சம் அடைகிறார். இதனால் சொந்த வீடு வாங்கலாம்.
ரிஷபம்:
இந்த வருடம் உங்களுக்கு நிறைய வளர்ச்சி இருக்கு அதாவது மரியாதை வளர்ச்சி பண வளர்ச்சி புகழ் வளர்ச்சி இப்படி ஏகப்பட்ட வளர்ச்சி இருக்கும். உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க கூடிய அமைப்பு உள்ளது. எனினும் இந்த வருட ஆரம்பத்தில் கொஞ்சம் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
மிதுனம்:
இந்த பராபவ வருடம் தொழில் ரீதியாக உங்களுக்கு வளர்ச்சி ஏற்படுகின்ற ஆண்டாக இருக்கும். இந்த வருடம் நீங்க அதிக கடுமையா உழைப்பீர்கள். உங்க உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை பெறுவீர்கள், அதனுடன் செலவுகளும் அதிகரிக்கும். கடன் தொல்லை அதிகரிக்கலாம். வருட ஆரம்பத்தில இருந்தே உங்களுக்கு ஒரு பதட்டமான சூழ்நிலை இருந்து கொண்டிருக்கும்.
கடகம்:
இந்த வருடம் இழந்ததை பிடிக்கக்கூடிய ஆண்டாக உங்களுக்கு இருக்கப்போகிறது. தொலைந்து போன பணம் திரும்பி வரும். கடக ராசிக்காரங்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு தங்களுடைய மனதிற்கு பிடித்தவர்களுடன் இணையக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்:
இந்த வருடம் பண பற்றாக்குறையின் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் கடன் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். இந்த வருடத்தை பொறுத்தவரைக்கும் மிதமான பலன்கள் மட்டுமே கிடைக்கும்.
கன்னி:
இந்த பராபவ வருடம் அனுபவங்களை கற்றுத் தரக்கூடிய ஆண்டாக கன்னி ராசிக்கு இருக்க போகிறது. சில விஷயங்கள்ல இழப்புகள் ஏற்படும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் இருக்கும். குழந்தைகள் ஆதாயம் அடைவார்கள். கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் முதல் எட்டு மாதங்கள் நெருப்பின் மீது நடப்பது போன்று தான் இருக்கும்.
துலாம்:
இந்த வருடம் உங்களுக்கு நிறைய மாற்றங்கள் ஏற்படும், ஏனெல் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் குரு உங்களுக்கு சுப பலன்களை அள்ளித் தருவார். உங்களுக்கு மரியாதை உயர்வு ஏற்படும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் விலகும். இளைய சகோதரர்களின் ஆரோக்கியத்தில் இருந்த கவலைகள் விலகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கான பராபவ வருட பலன்களை பொறுத்தவரை, சுப பலன்கள் சந்தோஷ பலன்கள் வருமான பலன்கள் வெற்றி பலன்கள் என நிறைந்திருக்கும். விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் வசதி வாய்ப்புகள் பெருகுகின்ற ஆண்டாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிகளுக்கான பராபவ வருடம் ரொம்ப சூப்பரா இருக்கும். 20 வருடத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கை அமையும். இதுவரை காணாத நிம்மதி இதுவரை காணாத சுகம் இதுவரை காணாத சந்தோஷம் இதுவரை வரை காணாத குடும்ப உறவுகளின் பாசம் இப்போது கிடைக்கும்.
மகரம்:
இந்த பராபவ வருடம் உங்களுக்கு சுமாராகவே இருக்கும். சில தவறான முடிவுகள் எடுக்கலாம். கவன சிதரல்கள் அதிகரிக்கும்.
கும்பம்:
பராபவ வருடம் கும்ப ராசிக்கு ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமையப்போகிறது. பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. வீண் வாக்குவாதங்கள் குடும்ப அமைதியைக் குலைக்கலாம்.
மீனம்:
பராபவ வருடம் மீன ராசிக்கு ஒரு முக்கியமான காலகட்டமாக அமையப்போகிறது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு இது சாதகமான காலம்.

0 Comments