Ad Code

Responsive Advertisement

நடிகர் விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

 




கரூர் துயர நிகழ்வு : நடிகர் விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்


கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி, தவெக தலைவர் விஜய் அளித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பினார்.


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி, தவெக தலைவர் நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்தை திங்கள்கிழமை திருப்பி அனுப்பினார்.


கரூரில் செப்டம்பர் 27-இல் நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து விஜய் சார்பில் ரமேஷின் மனைவி சங்கவியின் வங்கிக் கணக்குக்கு கடந்த 19-ஆம் தேதி ரூ. 20 லட்சம் நிவாரண நிதி அனுப்பிவைக்கப்பட்டது.


இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை சென்னைக்கு வரவழைத்து சந்தித்தார். இதனிடையே சங்கவிக்குத் தெரியாமல் அவரது உறவினர்கள் 3 பேரை தவெக நிர்வாகிகள் அங்கு அழைத்துச் சென்றதால், அதிருப்தியடைந்த சங்கவி, விஜய் அனுப்பிவைத்த ரூ.20 லட்சம் நிதியை பெறப்பட்ட வங்கிக் கணக்குக்கே திருப்பி அனுப்பினார்.


இதுதொடர்பாக சங்கவி மேலும் கூறியதாவது: “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூறுவதாகத் தெரிவித்திருந்தார்.


ஆனால் அவர் கரூருக்கு வரவில்லை. நான் எதிர்பார்த்தது ஆறுதல் மட்டுமே: பணத்தை அல்ல. இதனால் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளேன்” என்றார் அவர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement