Ad Code

Responsive Advertisement

வங்கி நாமினி பிரச்னை தீர்கிறது - நவ., 1 முதல் 4 பேரை நியமிக்கலாம்

 




வங்கி வாடிக்கையாளர்கள், வரும் நவ., 1 முதல், தங்கள் கணக்கிற்கு, நான்கு பேர் வரை நாமினிதாரர்களாக நியமிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


வங்கி திருத்த சட்டம் 2025க்கான அறிவிப்பு, கடந்த ஏப்., 15ம் தேதி வெளியானது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் நான்கு பேர் வரை நாமினிதாரர்களை, ஒரே நேரத்திலோ அல்லது வரிசைப்படியோ தேர்வு செய்து கொள்ளலாம். இதனால், வைப்பு கணக்குதாரர்கள், அவர்களின் நாமினிதாரர்களுக்கு கிளைம் செட்டில்மென்ட் எளிமையாக கிடைக்கும்.


ஆவணங்கள் மற்றும் லாக்கர்களைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் நாமினிதாரர்களை நியமிக்கும் போது, ஒவ்வொரு நாமினிதாரருக்கும் எத்தனை சதவீத பங்கு என்பதை குறிப்பிட வேண்டும் அல்லது அடுத்தடுத்து வரிசையாக நாமினிதாரர்களை தேர்வு செய்யலாம்.


நன்மைகள்

* சுலபமான வாரிசுரிமை, குறைவான சர்ச்சைகள்

*அதிக திறன் கொண்ட சொத்து பரிமாற்றம்

*வங்கிகளின் நிர்வாக சுமை குறையும்

*டிபாசிட்தாரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எளிதானது

*உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் குவியாமல் தடுக்கப்படும் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.62,225 கோடி 2023 மார்ச் ரூ.78,713 கோடி 2024 மார்ச் 26% உயர்வு


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement