சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த வகையில் நேற்று செப்டம்பர் 22ஆம் தேதி கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,430க்கும், சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் படி இன்று செப்டம்பர் 23ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,700க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 149 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,49,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.50-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
- 23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 (மாலை)
- 23.09.2025 ஒரு சவரன் ரூ.84,000 (காலை)
- 22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440 (நேற்று)
- 21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320
- 20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320
- 19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840
- 18.09.2025 ஒரு சவரன் ரூ.81,760
தங்கம் விலை குறையாது
தங்கம் விலை குறைய வாய்ப்பு ரொம்ப குறைவு. பெரிய சம்பவம் நடந்தாலும் கூட தங்கம் விலை அதிகபட்சம் ரூ.9500க்கு மட்டுமே போகும். ஆனால், இது இப்போதைக்கு வராது. தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறதே தவிரக் குறைய வாய்ப்பே இல்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

0 Comments