Ad Code

Responsive Advertisement

22ம் தேதி முதல் 'உரிமையுடன் கேளுங்கள்' - மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி

 



'மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும், 5 சதவீத வரியின் கீழ் குறைந்த விலைக்கு, வரும் 22ம் தேதி முதல் வாங்கிக் கொள்ளலாம்,' என, இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன் தலைவர் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது: மக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளும், தற்போது, 5 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில், மீண்டும் புதிய விலையை ஒட்டுவது இயலாத காரியம். அந்த மருந்துகளை, புதிய வரி விதிப்பின்படி குறைந்த விலையில், மக்களுக்கு வழங்க முடியும்.


அதனை எவ்வாறு செயல்படுத்துவது, ஏற்கெனவே உள்ள வரி நடைமுறையில், கொள்முதல் செய்த மருந்துகளை, குறைந்த விலையில் விற்றால் ஏற்படும் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பல்வேறு அறிவுறுத்தல்களும், பரிந்துரைகளும், மருந்து விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


எனவே, மக்களுக்கு வரும் 22ம் தேதி முதல் வரிச் சலுகை பலன்கள் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது. இருப்பில் உள்ள மருந்துகளை வாங்கினாலும், அதனை 5 சதவீத வரியின் கீழ் வழங்குமாறு, வாடிக்கையாளர்கள் உரிமையுடன் கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement