Ad Code

Responsive Advertisement

"கொய்யா இலை ஜூஸ்" - இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கிடைக்குமா.!?

 



கொய்யா இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. பாரம்பரிய மருத்துவங்களில் கொய்யா இலைகளை பல வழிகளில் பயன்படுத்துகிறார்கள். 


இதன் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம். நீரிழிவு நோய் - கொய்யா இலையில் இருக்கும் வேதிப்பொருள், ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக, அது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, உடலில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.


இதய நோய் -  கொய்யா இலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், நம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்தத்தை சரியான முறையில் சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.


நோய் எதிர்ப்பு சக்தி - கொய்யா இலையில் உள்ள பைட்டோநூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இவை பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற தொற்றுகளை எதிர்த்து, உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.


நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை

கொய்யா இலைகளில் ஆண்டிடியாபெடிக் பண்புகள் உள்ளன. எனவே, அதன் இலைகளை சாறு வடிவில் குடிப்பதால் நீரிழிவு அபாயத்திலிருந்து உங்களை விலக்கி வைக்கும்.


இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

கொய்யா இலைகள் சாறு இதய ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், கொய்யா இலைகளில் இருதய பாதுகாப்பு பண்புகள் உள்ளன, அவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.


தசைகள் சீராக இருக்கும்

கொய்யா இலைகளின் சாறு உடலின் தசைகளை ஆற்றும். கொய்யா இலை சாற்றில் குவெர்செட்டின் என்ற ஊட்டச்சத்து  உள்ளது. எனவே, இதை சாறு வடிவில் குடிப்பது நம் உடலின் தசைகளை தளர்த்த உதவுகிறது.


செரிமான கோளாறு 

கொய்யா இலைகள், உடலில் ஏற்படும் ஜீரண பிரச்சினை மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு, மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.


உடல் எடை குறைப்பு 

கொய்யா இலையில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய உதவிபுரிகிறது.


வலி நிவாரணி 

உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் கொய்யா இலையை அரைத்து கட்டலாம். இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படும்.


தோல் நோய்கள்

கொய்யா இலைகளை அரைத்து தேய்த்து குளித்து வரலாம். இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் குணங்கள், தோலில் உள்ள புண், அரிப்பு வறட்சி போன்றவற்றை சரி செய்கிறது.


எப்படி பயன்படுத்தலாம்

கொய்யா இலைகளை காய வைத்து பொடி செய்து பால் அல்லது சுடு தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வரலாம். இலைகளை நன்றாக கழுவி அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம் இவ்வாறு 21 நாட்கள் செய்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலவிதமான நோய்கள் குணமடையும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


கொய்யா இலை டீ


கொய்யா இலைகளை 4 பெரிய இலைகளாகவும் 4 கொழுந்துகளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் ஓமம் எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் (300 மி.லி) தண்ணீர் ஊற்றுங்கள், கொதித்த பிறகு, வெந்தயத்தைப் போடுங்கள், அடுத்து ஓமம் போடுங்கள் மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். பின்னர், கொய்யா இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும்.


அதே போல, கொய்யா இலைகள், சீரகம், இஞ்சி போட்டு கொய்யா இலை டீ குடிக்கலாம்.


அதே போல, முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் (300 மி.லி) தண்ணீர் ஊற்றுங்கள், அதில் சீரகம் போடுங்கள், இஞ்சி தட்டி போடுங்கள், 6-7 கொய்யா இலைகளைப் போடுங்கள். நன்றாகக் கொதிக்க வையுக்கள், பிறகு வடிகட்டி குடியுங்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement