Ad Code

Responsive Advertisement

தொடர்ந்து குறையும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

 



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.19), கிராமுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.


வாரத்தின் துவக்க நாளான நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.9,235-க்கு விற்பனையாகிறது.


தமிழ் மாதங்களான ஆனி, ஆடியில் அதிகளவிலான சுப முகூர்த்தங்கள் இல்லாதவையால் ஏற்பட்ட குறைவான தங்கத்தின் நுகர்வு மற்றும் உலகளாவிய அரசியலில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை தங்கத்தின் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,880-க்கும் விற்பனையாகிறது.


ஆபரணத்தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் மட்டும், சவரனுக்கு ரூ.1,360 வரை குறைந்து விற்பனையானது. அதேபோல், இந்த வாரத்திலும் தொடர்ந்து விலை குறைவதால், இல்லத்தரசிகளும், தங்க முதலீட்டாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


அதைத் தொடர்ந்து, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.126-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1.26 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement