Ad Code

Responsive Advertisement

இன்று (01.08.2025) முதல் மாறப்போகும் முக்கிய விசயங்கள்

 



ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மாறப்போகும் சில முக்கிய விசயங்கள் முழு விவரம்


சிலிண்டர் விலை

➤➤. ஒவ்வொரு மாதமும், முதல் தேதியன்று, எல்பிஜி எரிவாயு நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலைகளை மதிப்பாய்வு செய்து சில சமயங்களில் அவற்றில் மாற்றங்களை செய்கின்றன. அடுத்த மாதமும், அதாவது ஆகஸ்டு 1 அன்றும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


UPI சேவை

➤➤. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற UPI அடிப்படையிலான செயலிகளில் கணக்கு இருப்பு சரிபார்ப்பு மற்றும் டிரான்சாக்‌ஷன் வியூ ஆகியவற்றுக்கு வரம்பை நிர்ணயித்துள்ளது. 


➤➤. பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 


➤➤. மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.


➤➤ தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும்.


➤➤ ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு. 


மாதம் 15 ஆயிரம்

➤➤. பிரதம மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 1 முதல், முதல் முறையாக EPFO-வில் பதிவு செய்த ஊழியர்களுக்கு அரசாங்கம் ரூ.15,000 தொகையை வழங்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கேஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்

➤➤. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் உள்ளது. 


➤➤. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது. 


➤➤. எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது


*✍️ Fastag ரீசார்ஜ் தொல்லை இனி இல்லை - ஆகஸ்டு 15 முதல் நாடு முழுவதும் 1 வருடத்திற்கு 3000 மட்டுமே முழு விவரம்


➤➤. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.


➤➤. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 3000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3000 பாஸ் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் எளிதாக செல்ல முடியும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement