சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மார்க்ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மதிப்பெண்கள் எவ்வளவு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். விராட் கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 9230 ரன்கள் எடுத்துள்ளார்.
விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து, அவரது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைரலாகி வருகிறது. இவர் டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹாரில் உள்ள சேவியர் கான்வென்ட் பள்ளியில் படித்தார்.
விராட் கோலி 10 ஆம் வகுப்பு CBSE வாரியத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அவர் ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்களையும், சமூக அறிவியலில் 81 மதிப்பெண்களையும் பெற்றார்.
சில வருடங்களுக்கு முன்பு விராட் கோலி இந்த மதிப்பெண் பட்டியலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். "உங்கள் மதிப்பெண் பட்டியலில் குறைவாக சேர்க்கும் விஷயங்கள், உங்கள் குணத்தில் அதிகமாக சேர்க்கின்றன என்பது வேடிக்கையானது" என்று அவர் எழுதியிருந்தார்.
2004 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்துள்ள விராட் கோலி மொத்தமாக 600 மதிப்பெண்களுக்கு 419 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த சான்றிதழை தற்போது ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
0 Comments