இந்திய பங்குசந்தை சரிவை சந்தித்தது மட்டுமில்லாமல் ஹாங்காங், தாய்வான், ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், சுவிடன், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை கண்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தன.. இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு.
இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்தி உள்ளது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை உயராது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே போல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று ஏப்ரல் 7) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,285-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று (ஏப்ரல் 8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 18 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,780-க்கும், ஒரு சவரன் 400 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது, ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
0 Comments