Ad Code

Responsive Advertisement

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம்: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

 




முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:


முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படவுள்ளது. 55 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள், ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரா்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரா்களின் விதவை மகள்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.


எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement