பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ? என்று உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக சார்பில் வழக்கறிஞர் கே. பாலு மேல்முறையீடு செய்தார். இந்த முறையீட்டிற்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி வழங்க உத்தரவிட முடியாது. போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று. இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
அண்ணா பல்கலை. விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மாணவி வன்கொடுமை தொடர்பாக போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல.
வெறும் விளம்பரத்திற்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம். பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?,”இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments