பொதுவாகவே வயது அதிகரிக்க அதிகரிக்க அந்த உணவை சாப்பிட கூடாது, இந்த உணவை சாப்பிட கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும். அதிலும் குறிப்பாக 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அசைவ உணவுகளை சாப்பிடவே கூடாது என்று சொல்லி, நமது நாக்கை கட்டிப்போட்டு விடுவார்கள்.
ஒரு சிலர், தாமாகவே அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி கொள்வது உண்டு. உண்மையாகவே 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அசைவம் சாப்பிட்டால், உடலில் பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர் சிவராமன் விவரித்துள்ள உண்மையை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
மீன் உணவுகள் எளிதாக செரிமானம் ஆகக் கூடியது, இதனால் மீனை எந்த வயதை சார்ந்தவர்களும் தாராளமாக சாப்பிடலாம். எண்ணெய்யில் வறுத்து சாப்பிடாமல், வேக வைத்த மீன்களை சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
வயதான பின்பு உடல் உழைப்பு குறைந்து விடுவதால், உணவு செரிமானத்திற்கு நேரமாகும். இதனால், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால், வயதானவர்கள் அசைவம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுப்படையாக கூறுவதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
0 Comments