மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின் பிராமண நலவாரியத் தலைவர் விஷ்ணு ரஜவுரியா அறிவித்துள்ளார்.
இந்தூரில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா, "சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம்.
அதனால் அவர்களில் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் 'மோட்ச தர்மத்தை' அடைய முடியும்.
நாடு நாளுக்கு நாள் முன்னேறி வருவதால், இந்தியாவில் வளங்களுக்குப் பஞ்சமில்லை. நம்மிடம் வலுவான மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசாங்கம் உள்ளது.
வறுமை மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது. சமீபகாலமாக 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். .
கல்விதான் முக்கியம் என கற்பிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கின்றனர். நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை" என்று தெரிவித்துள்ளார்.
0 Comments