Ad Code

Responsive Advertisement

இளையராஜா வெளியேற்றப்பட்ட சர்ச்சை - அறநிலையத்துறை விளக்கம்..!

 



ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். 


இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். 


இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது.


இந்த நிலையில், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார் அதில், அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். 


கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 


ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்டப வாசல்படி ஏறிய போது, அர்த்த -மண்டபம் முன் நின்று தரிசனம் செய்யலாம் என கூறினார். 


ஜீயர் கூறியதை ஏற்றுக் கொண்டு இளையராஜாவும் அர்த்த மண்டபத்தின் முன் நின்று தரிசனம் செய்தார். ராமானுஜ ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என இணை ஆணையர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement