Ad Code

Responsive Advertisement

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? வெளியேறிய சாச்சனா பதில்

 



பிக் பாஸ் வெற்றியாளர் யாராக இருக்கக் கூடும் என்பது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை சாச்சனா பதிலளித்துள்ளார்.


பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் போட்டியாளர்களில் ஒருவர் சாச்சனா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே போட்டியிலிருந்து வெளியேறினார். பின்னர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார்.


மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்ததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனாவுக்கு சாதகமாக விஜய் சேதுபதி கருத்துகளைக் கூறுவார் என பலரும் கருத்துகளைப் பரப்பிவந்த நிலையில், அதனை இருவருமே பொய்யாக்கினர்.


சாச்சனா ஒரு போட்டியாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராக அனைவரையுமே சரிசமமாகவே விஜய் சேதுபதி கருதினார். சாச்சனா செய்த தவறுகளை அவ்வபோது விஜய் சேதுபதி கண்டித்து, சுட்டிக்காட்டினார்.


இந்நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்றதால் 63 நாள்களில் சாச்சனா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


பிக் பாஸ் வெற்றியாளர்?


பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் பழகியதாலும், தற்போது வெளியே இருந்து பிக் பாஸ் போட்டியைப் பார்ப்பதாலும், இறுதியில் வெற்றியாளர் யார் என்பது குறித்து சாச்சனா பதில் அளித்துள்ளார்.


எந்த மூன்று நபர்கள் இறுதிப்போட்டிவரை செல்வார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சாச்சனா, முத்துக்குமரன் என பதில் கூறினார். (மற்ற இருவர் பெயரை சாச்சனா கூறவில்லை)


முத்துவுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்த நபராக வி.ஜே. விஷால் இருப்பதாக சுட்டிக்காட்டிய சாச்சனா,


வீட்டில் வி.ஜே. விஷால், அமைதியாக இருப்பதைப்போன்று தோன்றியதாகவும், ஆனால் வெளியே வந்து பார்த்தால் மிகவும் அமைதியாக இருப்பதைப்போன்று உள்ளதாகவும் கூறினார்.


முத்துக்குமரன் நல்ல மனிதர். உண்மையாகவே நல்ல விளையாட்டு வீரன். பிக் பாஸ் எப்படிப்பட்ட போட்டி என்பதை நன்கு ஆராய்ந்து மற்றவர்களை முடிந்தவரை காயப்படுத்தாமல் விளையாடுபவர் எனக் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement