Ad Code

Responsive Advertisement

கார்த்திகை தீபம் - எப்படி விரதம் இருந்து, விளக்கேற்றினால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும் ?

 



திருக்கார்த்திகை அன்று எந்த முறையில் விரதம் இருக்க வேண்டும், எப்போத விரதத்தை துவக்கி, எப்போது நிறைவு செய்ய வேண்டும், எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும், என்ன பதிகங்கள் பாடி சிவனை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


கார்த்திகை மாதம் என்பது சிவ பெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் ஏற்ற மாதமாகும். தங்களின் யார் பெரியவன் என்ற மகாவிஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஏற்பட்ட போது, ஜோதி பிளம்பாக தோன்றிய சிவ பெருமான் தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர் என்றார். 


தானே பெரியவன் என்ற ஆணவத்துடன் முடியை காண சென்ற பிரம்மாவிற்கு தோல்வியை கிடைத்தது. இதே போல் மனிதர்களுக்கு ஏற்படும் ஆணவத்தை அழிப்பதற்காக பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கு காட்சி அளித்த திருவண்ணாமலை தலத்திலேயே ஈசன் மலையாக அமர்ந்தார். அண்ணா என்றால் யாரும் அணுக முடியாத என்று பொருள். அண்ணாமலை என்றால் யாரும் அணுக முடியாத மலை என்று பொருள்.


கார்த்திகை விரதம் :


சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி அளித்தது கார்த்திகை மாதத்தில் என்பதால் அவருக்கும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் என்பதால் முருகப் பெருமானுக்கும் ஏற்ற மாதமாக கார்த்திகை மாதம் சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளில் ஜோதி வடிவமாக இறைவனை வழிபடுவதற்காக தீபம் ஏற்றி திருக்கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடுகிறோம். இந்த நாளில் எப்படி விரதம் இருந்து, எந்த முறையில் விளக்கேற்றினால் சிவ பெருமானின் அருளும், முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


திருக்கார்த்திகை தீபம் விரதம் இருக்கும் முறை :


இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. டிசம்பர் 13ம் தேதி காலை 06.51 மணிக்கு துவங்கி, டிசம்பர் 14ம் தேதி காலை 04.56 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. இதனால் கார்த்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் முந்தைய நாள் பரணி நட்சத்திரம் அன்று இரவே விரதத்தை துவக்கி விட வேண்டும். திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தை துவக்கி விட வேண்டும். பகல் முழுவதும் முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.


விரதம் நிறைவு செய்யும் முறை :


மாலையில் திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரராக அண்ணாமலையார் வருடத்திற்கு ஒருமுறை, வெறும் 3 நிமிடங்கள் மட்டும் காட்சி தருவார். அவரது தரிசனம் கிடைத்த அடுத்த நொடி, மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதை கண்டு, "அண்ணாமலையாருக்கு அரோகரா" என சொல்லி வேண்டிக் கொண்டு, முதலில் நம்முடைய வீட்டின் வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு பூஜை அறையிலும், அதற்கு பிறகு வீட்டின் மற்ற இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்ட பிறகு, பூஜை செய்து, மாலை 6 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வீட்டில் குறைந்த பட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். அவற்றில் ஒரே ஒரு தீபமாவது நெய் தீபமாக ஏற்ற வேண்டும்.


படிக்க வேண்டிய பதிகம் :


இந்த ஆண்டு கார்த்திகை திருநாளன்று பிரதோஷமும் இணைந்து வருகிறது. அதனால் மாலையில் திருவாசம், சிவபுராணம், சிவ அஷ்டகம் படிப்பது சிறப்பு. அதே போல் முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் போன்றவற்றையும் படிக்கலாம். சிவ பெருமானுக்கு அன்றைய தினம் கார்த்திகை பொரி, அப்பம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். திருக்கார்த்திகை அன்று ஒருவருக்காவது அன்னதானம் செய்வது நல்லது. இதனால் கங்கை கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement