Ad Code

Responsive Advertisement

ஆயுளுக்கும் மருந்து மாத்திரையின்றி வாழ ஆறு ஐடியாக்கள்

 



பொதுவாக  மருந்து மாத்திரையின்றி வாழ வேண்டுமென்றால் அதற்கென்று சில வாழ்க்கை முறை மாற்றங்களை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர் .இது பற்றி நாம் காணலாம்


1.காய்கறிகள் அல்லது பழங்களை எடுத்துக்கொண்டால் நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யலாம்  . இதன் மூலம் இதய நோய்கள் புற்றுநோய்கள் போன்ற மிகப்பெரிய ஆபத்தான நோய்கள்  நம் உடலை பதம் பார்க்காமல் தப்பித்து விடலாம்


2.நம் இதயத்திற்கு பலம் சேர்க்கும் நல்ல கொழுப்பு நிறைந்த அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, பாதாம், ஆகியவை எளிதாக செரிமானமாகும் மற்றும் ,நார்ச்சத்து அதிக அளவில் கொண்டிருக்கும் அக்ரூட் பருப்புகளில் ஒமேகா 3 உள்ளது.இதை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்


3 நம் உடலுக்கு பலம் சேர்க்கும் பழுப்பு அரிசி, கோதுமை, திணை வகைகள், பாஸ்தா, மல்டிகிரெய்ன் ரொட்டி போன்ற முழு தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நிறைந்துள்ளது.


4. நாம் உண்ணும் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகள்  மற்றும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. எனவே அதிகம் தண்ணீர் குடித்தால் நச்சுக்களை வெளியேற செய்யலாம்


5.தண்ணீருடன் ஆரோக்கியமான சில பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை பழம், சீரகம்,தேன், போன்றவை நம் குடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும்


6. நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்கும் கடலெண்ணெய்  மற்ற எண்ணெய்களை காட்டிலும் சிறந்ததாக அமைகிறது.எனவே இந்த எண்ணெய் அதிகம் சேர்த்து உங்கள் உடலினை ஆரோக்கியமாய் வைத்து கொள்ளவும்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement