Ad Code

Responsive Advertisement

முடி உதிர்வு பிரச்சினையை தவிர்க்கும் வழிகள்

 



பொதுவாக  முடி உதிரும் பிரச்சினைஉள்ளோர்   இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியாது .அடுத்து அவர்கள் விளம்பரத்தை பார்த்து கண்ட ஆயிலை வாங்கி உபயோகப்படுத்தி இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் இழந்து விடுகின்றனர் .முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழூக்கை இப்போது 30 வயதிலேயே வந்து விடுகிறது


இதை எப்படி தவிர்க்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்


1.இதை தவிர்க்க நம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் சரியான தீர்வாக உள்ளது.


2.மேலும்  ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ,போன்றவைகளை உங்கள் தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மசாஜ் செய்யலாம்.


3.ஹேர் டிரையர் அறவே பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் அதிகப்படியான வெப்பம் ஸ்கால்ப்பில் படுவதால் அரிப்பு பிரச்சினை ஏற்படும்  மேலும் கூந்தலின் வேர்களை  கடினமாக பாதிக்கப்படுவதால் இதை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தால் முடி உதிராது .


4.தலைக்கு குளிக்கும் போது கண்டிஷனர் அப்ளை செய்வது நல்லது . ஷாம்பு பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் பயன்படுத்தி வருவோருக்கு முடி உதிரும் பிரச்சினை இருக்காது


5.மேலும் முடி உதிர்வை தடுக்க அதிகமான எண்ணெய் அதிகப்படியான, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள் இதனால் உங்கள் உடலுக்கும் நல்லது உங்கள் கூந்தலுக்கும் நல்லது மேலும் அதிகமாக நார்ச்சத்து  உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.இது முடி வளர உதவும்



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement