அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை ஆகும்.
இதனை எளியமுறையில் ஒரு சில இயற்கை பொருட்கள் மூலம் குணப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும்.
சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.
குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம்.
வயிற்று அமிலத்தை சமன் செய்ய சமையல் சோடா உதவும். அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம் தரும். நாளுக்கு ஒருமுறை ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடாவை தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.
நாளுக்கு ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும்.
அஜீரணத்தை குணப்படுத்த இலவங்கப்பட்டை உதவும். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேநீரில் கலந்து நாளுக்கு 2-3 முறை அருந்தலாம்.
பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவும். தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.
0 Comments