Ad Code

Responsive Advertisement

தலை வலி - இயற்கை வைத்தியம்

 



பொதுவாக வேலை பளு ,அதிக மன அழுத்தம் ,செரிமான கோளாறு ,சைனஸ் ,சளி தொந்தரவு ,அதிக நேரம் கம்ப்யுட்டர் உபயோகம்,எதிர்காலம் பற்றிய கவலை  போன்றவை  தலைவலிக்கான காரணம் எனலாம் .இந்த தலை வலியை போக்க இயற்கை மருத்துவம்தான் சீக்கிரம் பலன் தந்து மீண்டும் மீண்டும் வராமல் நம்மை பாதுகாக்கும்


தலை வலி நீங்க சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள் .


1.பல நோய்களுக்கு மருந்தாகும் துளசி, எந்த நோயையும் தீர்த்து வைக்கும் சுக்கு போன்றவை இயற்க்கை நமக்கு தந்த வரப்ரசாத நோய் தீர்க்கும் மூலிகைகள்.


2.இவைகள் மூலம் எந்த தலைவலியை எளிதில் குணப்படுத்தலாம்.


3.முதலில் நீங்கள்  துளசி இலைகள் ஐந்து எடுத்துக்கொண்டு ,அதோடு ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு லவங்கத்தை சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் தலைவலி இருக்கும் இடத்தில் பற்று போட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் இருக்குமிடம் தெரியாமல் ஓடி விடும்


4.அடுத்து  சிலருக்கு உடல் உஷ்ணத்தால் தலைவலி  ஏற்பட்டு தலையே வெடித்து விடும் போல தொல்லை கொடுக்கும் .


5.அது போன்ற சமயங்களில் சீரகம் மற்றும் கிராம்பை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் அந்த கொடுமையான  தலைவலி நீங்கி புத்துணர்வு உண்டாகும் .


6.நீண்ட காலம் தலை வலியால் அவதிப்படுவோர் பால், இஞ்சி சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய  மூன்றையும் கலந்து சூடு செய்து தலைக்கு தடவி ஒரு ஐந்து நிமிந்து நன்கு மசாஜ் செய்த பின்பு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் தலை வலி பறந்தே போய் விடும் .


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement