* தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக பிறர் பலவீனத்தை தனக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
* தன்னிடம் இருப்பதைக் கொண்டு கர்வம் கொள்ள மாட்டார்கள். பெருமை பேசுவதற்காக கடன் வாங்கி பொருட்கள் வாங்க மாட்டார்கள்.
* நண்பர்களை குடும்ப விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். ஆலோசனை வேண்டுமானால் கேட்பார்கள். முடிவு எப்பொழுதுமே தன்னிடத்தில்.
* குறைவாகப் பேசுவார்கள்.
புறம் பேசமாட்டார்கள். எப்படியும் சேரவேண்டியவரிடம் சேர்ந்து விடும் என்பதை அறிந்தவர்கள்.
* அரசியல்வாதி/விளையாட்டு வீரர்கள்/ நடிகர்களுக்காக சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள். திறமையை மட்டுமே ரசிப்பார்கள்.
* வியாபார தந்திரங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். உழைக்காமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவரே தந்திரங்களில் சிக்குவார்கள்.
* தோல்விக்குப் பிறகு துவண்டு போகாமல் உடனடியாக அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள். பிறரின் வெற்றியையும் அங்கீகரிப்பார்கள்.
* அக்கறை கொள்வார்கள்.
பொழுதுபோக்கு கூட அவர்களுடைய லட்சியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். தினமும் தன் லட்சியத்தை நோக்கி ஒரு அடியாவது முன்னேறியிருப்பார்கள்.
* தொலை நோக்கு பார்வை கொண்டவர்கள். பூங்காவில் அமர்ந்து இருந்தால் கூட, அருகில் இருக்கும் ரோஜாவை ரசிக்காமல், தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் எத்தனை விழுதுகள் என்று எண்ணுவார்கள்.
* லேசாக புருவம் நெறித்து, கண்கள் சுருக்கிய கூர்மையான பார்வை கொண்டவர்கள். முக்கியமாக ஏதோ யோசிக்கையில் கண்கள் மூடி யோசிப்பார்கள்.
*படித்ததில் வியந்தது.*
0 Comments