Ad Code

Responsive Advertisement

அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும் - முதல்வர் உத்தரவு

 



புயல் மற்றும் கனமழையால் அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. 


இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை புறநகர் மற்றும் அனைத்து பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இன்று(நவ.30) முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்..முன்னதாக, ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 


அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி மழை பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement