Ad Code

Responsive Advertisement

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வோருக்குக் காத்திருக்கும் ஆபத்துக்கள்

 



அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்து பணியில் சிறந்தவராகத் இருந்தாலும் உங்கள் உடல் விஷயத்தில் ஆரோக்கியமற்றவர்களாகவே இருப்பீர்கள்


இன்று சீட்டை விட்டு எழுந்திருக்காமலே வேலை செய்தேன் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால் உங்களைதான் ஆபத்து நெருங்குகிறது. அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்து பணியில் சிறந்தவராகத் இருந்தாலும் உங்கள் உடல் விஷயத்தில் ஆரோக்கியமற்றவர்களாகவே இருப்பீர்கள். எவ்வாறு என்பதைக் கீழே காணலாம்.


இதயக் கோளாறுகள் ஏற்படும்: 

அதிக நேரம் அமர்வதால் ஏற்படும் பேராபத்துகளில் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான். ஏனெனில் நாம் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கெட்டக் கொழுப்புகள் கரைவது குறைந்துவிடும். அந்த கெட்டக் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் தேங்கி நின்றுவிடும். அதன் விளைவு இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் வரும்.


உடல் வலி அதிகரிக்கும்: 

கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முது வலி என நாள்பட்ட நோய்களால் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கும் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பதேக் காரணம்.


உடல் தோற்றம் சீரற்று போகும் : 

ஒரே மாதிரியான நிலையில் நேராக அப்படியே அமர்ந்திருப்பதால் முதுகுத் தண்டு பாதிப்படையக் கூடும். இதனால் உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். உங்கள் உடல் தோற்றம் நீங்களே வெறுக்கும் அளவிற்கு மாறிவிடும். லாப்டாப் அல்லது கணினியை நோக்கி தலையை குனிந்தவாறோ, நிமிர்ந்தோ அமர்ந்தாலும் இந்தப் பிரச்சனை வரும்.


மூளை பாதிப்படையும்: 

அதிக நேரம் அமர்வதால் உடல் மட்டுமல்ல மூளையும் பாதிப்படையும். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் நிஞாபக மறதி அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. மூளையில் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் நரம்புகள் விரைவில் பாதிப்படைகிறதாம். இதனால் புதிதாக நாம் சேகரிக்கும் நினைவுகளை அழித்துவிடுகிறதாம்


உடல் எடை அதிகரிக்கும்: 

அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வோர் என்னதான் எடைக் குறைக்க டயட் உணவுகளை உட்கொண்டாலும் அதில் பலன் இல்லை. உடலில் எந்தவித ஆற்றலும் இல்லாத பட்சத்தில் கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறாமல் தேங்கி உடல் எடையை அதிகரித்துவிடும்.


நீரிழிவு நோய் வரலாம்: 

இன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் உடல் ஆற்றல்கள் அற்ற வாழ்க்கை முறைதான் காரணமாக இருக்கிறது. இதை வைத்து நார்வெயின் பல்கலைக்கழகம் நடத்திய ஹண்ட் என்கிற ஆராய்ச்சியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோருக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு நிச்சயம் வரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது.


வெரிகோஸ் நோய் அதிகரிக்கும் (நரம்பு சுருக்க நோய்): 

அதிக நேரம் அமர்ந்திருப்பதால் கால் வலி அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக கால் நரம்புகளில் வீக்கம் ஏற்படும். இதனால் வெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருட்டல் நோய் வரும். இன்று பலரும் இந்த நோயால் அவதிப்படுகின்றனர். அதற்கும் உடல் ஆற்றல் இல்லாத வேலைகள் அதிகரித்திருப்பதேக் காரணம்.


மனக் கவலை அதிகரிக்கும்: 

அதிக நேரம் கணினி முன் அமர்ந்தே வேலைப் பார்ப்பதால் மனதளவில் தனிமையை ஏற்படுத்துகிறது. இதனால் மனக் கவலை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையினால் மனத் தொந்தரவுகள் அதிகமாகிறது. இதனால் எப்போது சோர்வான தோற்றத்திலேயே இருப்பீர்கள். உடல் அளவில் சுருசுப்பாக இருக்க முடியாமல் போகும்.


தூக்கமின்மை அதிகரிக்கும்: 

கணினி, லாப்டாப் முன்பு அதிக நேரம் வேலை பார்ப்பதால் அதன் வெளிச்சம் கண்களை பாதிப்படைய செய்கிறது. இதனால் நம் தூக்க முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மறுநாள் சுருசுருப்பாக வேலை தொடங்க முடியாமல் போவதற்கும் இதுதான் காரணம்.


இதை எவ்வாறு சரி செய்வது? 

நீங்கள் அதிகபட்சமாக பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நாற்காலியிலிருந்து எழுந்து நடங்கள். உங்கள் அலுவலகத்திலேயே இரண்டு முறை காரணமே இல்லை என்றாலும் நடங்கள். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கைக் கால்களை வீசுங்கள். இடுப்பை இருபுறமும் வலையுங்கள். முடிந்தால் ரெஸ்ட் ரூம் சென்று சிம்பிள் உடற்பயிற்ச்சி ஏதேனும் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் மேலே குறிப்பிட்ட நோய்களிலிருந்து விலகி இருக்கலாம்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement